தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களை உள்ள நிலையில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி சமயம் ஒரு வாரம் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
இந்த வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதற்காக குடும்பமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி வர தொடங்கியுள்ளனர்.
ஈரோடு ரெயில்வே போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி ரெயில் நிலையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்து வருகின்றனர்.