ஈரோட்டில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் தேங்கிய மழை நீரினால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதி.
ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஓரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு வஉசி பூங்கா எதிரி உள்ள நேதாஜி தினசரி காய்கறிகள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை கடைகள் ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த காய்கறிகள் விற்பனை பகுதியில் தேங்கிய மழை நீரின் காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். ஒவ்வொரு முறையும் இதேபோன்ற பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமான தீர்வு கான வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.