மணியாச்சி பள்ளத்தில் வெள்ளம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கும் மேலாக கன மழை பெய்தது.
இதன் காரணமாக, மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள பெருக்கால், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள குட்டையூர், வேலாம்பட்டி ஆகிய கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதிகளவில் மணியாச்சி பள்ளத்தில் தண்ணீர் செல்வதால், அங்கிருந்து யாரும் வெளியே வர முடியாத சூழலும், கரையின் இப்பகுதியில் இருந்து யாரும் கிராமத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.
மணியாச்சி வழியாக செல்லும் வெள்ளம் பாலாறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.