சிவகங்கை - Sivaganga

சண்முகநாதர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் அண்ணா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வர சித்தி விநாயகர் திருக்கோவிலில் புதிதாக சண்முகநாதர் முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் வளாகத்தில் புதிதாக வள்ளி தெய்வானை தேவியர்களுடன் ஸ்ரீ சண்முக நாதர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக வைபவம் துவங்கியது. கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் மற்றும் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. பக்தர்கள் 108 ஹோம பொருட்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து யாக சாலையில் சமர்ப்பித்தனர் பின்னர் யாக குண்டத்தில் பட்டு வஸ்திரங்கள் பூர்ணாகுதி சமர்ப்பித்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனை அடுத்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கும் மூலவர் சண்முக நாதர் பெருமானுக்கும் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன. நிறைவாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

வீடியோஸ்


சிவகங்கை
Sep 06, 2024, 17:09 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி திருத்தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

Sep 06, 2024, 17:09 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகா்திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்திபெருவிழாவைமுன்னிட்டுதேரோட்ட விழா நடைபெற்றது. இவ்விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி மூஷிகம் யானை குதிரை கமலம் ரிஷபம்பூதம், சிம்ம வாகனத்தில்பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (செப்.,6) ஒன்பதாம் திருநாளில் காலை உற்சவர் கற்பக விநாயகர் பிட்டுக்கு மண்சுமந்த அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் விநாயகப் பெருமானும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து மலர்களால் அர்ச்சனைகள் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தெய்வங்களை தோளில் சுமந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் பெருமானையும் ஸ்ரீ சண்டிகேஸ்வர ஸ்வாமியை சிறியதேரிலும் எழுந்தருள செய்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து தேரை வடம் படித்து இழுத்தனர்.