மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் இவர் அஞ்சல் துறையில் பணி செய்து வருகின்றார் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்துள்ளனர் இந்நிலையில் சூரிய பிரகாஷின் ஒரு வயது மகனான தரன்தேவாவுக்கு பவுடர் அடித்து, பொட்டு வைத்துள்ளார் தரண்தேவாவின் தாய் இவர் அடுப்படிக்கு சென்ற நிலையில் குழந்தை அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளது திடீரென அந்த குழந்தை மூச்சு திணறியதை அடுத்து அவர் தாய் பார்த்தபோது அவர் அருகில் இருந்த கண் மை டப்பா குழந்தையின் வாயில் இருப்பதை அறிந்த குழந்தையின் தாய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார் எதிர்பாராத விதமாக குழந்தை டப்பாவை முழுங்கி விட்டது இந்த நிலையில் குழந்தையின் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை முழுங்கி இறந்த சம்பவம் இன்று மாலை 5 மணி அளவில் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.