அரசு பள்ளிகளுக்கு தேவையான கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி

68பார்த்தது
சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில், பள்ளிகளின் நவீன வளர்ச்சியை
கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 60 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தனியார் பவுண்டேஷன் சார்பில் ஸ்மார்ட் கிளாஸ், நவீன தொழில் நுட்பத்திலான ஆய்வு கருவிகளை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி