தமிழ்நாடு விவசாய சங்க மகணேசன் தலைமையில் மானாமதுரை தேவர் சிலை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேரவை கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்தப் பேரவைக் கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தலைவராக ஆறுமுகம்செயலாளராக எம் முருகேசன் கௌரவத் தலைவராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூபாய் 400 உயர்த்தி தரவேண்டும். பல்லவன் ரயில் மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழகத்தில் உடனடியாகபெண்களுக்கான அவசர சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக பொருத்தி பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மானாமதுரை ஆற்றில் உள்ள சீமை கருவேல் மரங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.