சண்முகநாதர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேக விழா

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் அண்ணா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வர சித்தி விநாயகர் திருக்கோவிலில் புதிதாக சண்முகநாதர் முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் வளாகத்தில் புதிதாக வள்ளி தெய்வானை தேவியர்களுடன் ஸ்ரீ சண்முக நாதர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக வைபவம் துவங்கியது.

கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் மற்றும் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. பக்தர்கள் 108 ஹோம பொருட்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து யாக சாலையில் சமர்ப்பித்தனர் பின்னர் யாக குண்டத்தில் பட்டு வஸ்திரங்கள் பூர்ணாகுதி சமர்ப்பித்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

இதனை அடுத்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கும் மூலவர் சண்முக நாதர் பெருமானுக்கும் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன. நிறைவாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி