அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் இன்று (செப்.,5) ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட, ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்ட விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலர் கே. ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் எஸ். எம். முனியாண்டி வரவேற்றார். மாவட்டச்செயலர் பி. திருஞானம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வி. கௌரி நன்றி கூறினார்.
இதில், மாவட்ட நிர்வாகிகள், காண்டீபன், கனகராஜ், சபரிநாதன், கோபாலகிருஷ்ணன், தியாகராஜன், சேதுராமன், கோபால், தண்டபாணி, தஸ்லிமா, வசந்தி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
சரியான எடையில் தரமான பொருள்களை அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் 100% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்ட விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,