சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் முக்கிய வீதி வழியாக வானவேடிக்கைகள் முழங்க மண்ணால் செய்த குதிரைகளை சுமந்து வந்து கோயில் முன்பாக கொண்டு வந்து சேர்த்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்பகுதி இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்