வீரமுத்துப்பட்டி கிராமத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்.

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்குட்பட்டநாட்டரசன் கோட்டை அருகே உள்ள வீரமுத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 8 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவு பந்தைய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முத்தூர் நடராஜபுரம் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் எல்லையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போட்டியினை முத்தூர் வாணியங்குடி கண்டுப்பட்டி செங்குளிப்பட்டி துவரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக காலை 11: 30 மணி வரை போட்டியினை கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி