புத்தர் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பாகனேரி அமைந்துள்ள புத்தர் திருக்கோவிலில் பகதர்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்தனர். கிமு 563 க்கும் கிமு 483 க்கும் இடையில் வாழ்ந்தவர் புத்தர். இவரை அடிப்படையாக கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் ஆன்மீக குருவாகவும் அவர் வாழும் காலத்திலேயே 40, 000 துறவிகள் கொண்டு அனைத்து இடங்களுக்கும் ஆன்மிக அலையை செயல்படுத்தினார். மிகப்பெரிய ஞானம் பெற்ற புத்தர் அனைத்து மக்களுக்கும் ஆன்மீகத்தை போதித்தார்.

இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட புத்தர் சுவாமிக்கு இவ்வூரில் பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்று வருகின்றன. இன்று ஸ்படிக வைரம் பிரதிஷ்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடந்தன முன்னதாக புத்தர் சுவாமிக்கு நாணயம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. தொடர்ந்து ஜப்பான் தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த புத்த துறவிகள் பல இசைக்கருவிகளுடன் பிரார்த்தனை செய்தும் ஜப்பானிய முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தியும் தியானம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புத்தருக்கு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்தனர் தொடர்ந்து இக்கோவிலில் தியான மையம் மற்றும் இலவச கல்வி மையம் முக்கியஸ்தர்கள் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி