சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியினர் சிவகங்கை நகராட்சி ஆணையாளரிடம் இன்று (செப்.,4) மாலை கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் கட்டண கழிப்பறை உள்ளது. இதனால் அப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினால் கழிப்பறை கட்டப்படுவதாக தகவல் வந்துள்ளது. அந்த கழிப்பறை கட்டினால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் என பாஜகவினர் சிவகங்கை நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.