கோவை:சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்; தபால் அனுப்பும் போராட்டம்
கடந்த இரண்டு மாதங்களாக உரிமைக்காக போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை சட்டரீதியாக அங்கீகரிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் இன்று 3 மணிவரை நடைபெற்றது. இது தொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டதுணைச்செயலர் பி. பாதாளகருப்புதமிழக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவுக்கு தபால்மூலம் அனுப்பிய கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், கங்கவார் சத்திரத்திலஇயங்கிவரும் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை செய்யும். 1600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்திய அரசியல் சாசனம் சரத்து 19வழங்கியுள்ளதொழிற்சங்க அமைக்கும் அடிப்படைஉரிமை கோரியும், இந்திய தொழிற்சங்க சட்டம்1926ன் படி தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரியும் கடந்த 40 நாட்களாக போராடி வருகின்றனர். முறையாக அனைத்து ஆவணங்களையும் தொழிலாளர் துறை பதிவாளர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர்களிடம் ஒப்படைத்து 45 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரைபதிவு எண்ணையும், சான்றிதழையும்ஒப்படைக்காமல் இந்திய தொழிற்சங்கம் சட்டம் 1926மீறி வருகின்றனர். சட்டம் வழங்கியுள்ளஉரிமையை நிலைநாட்டிட தமிழ்நாடுதொழிலாளர் நலத்துறை அமைச்சரும் தலையிட்டு, உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.