
கீரனூர்: போலீஸ் ரோந்து தீவிரப்படுத்த கோரிக்கை
குளத்தூர், கீரனூர் பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை வழிமறித்து தாக்குவதும், அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் போன்றவற்றைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கீரனூர், குளத்தூர் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் ஏராளம் உள்ளன. வேலைக்குச் சென்று திரும்பும் பலரும் இரவில் கீரனூர், குளத்தூரில் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் செல்வர். இருசக்கர வாகனங்கள் திருடப்போவதும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, போலீசார் ரோந்துக் குழுக்களை அதிகப்படுத்தி கிராமச்சாலைகளில் கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.