காரைக்குடியில் கஞ்சா வியாபாரியை விரட்டி விரட்டி கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனத்தணிக்கை செய்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காவல் நிலையத்தில் பிணையில் கையெழுத்திட்டு சென்ற கஞ்சா வியாபாரி மனோஜை துரத்தி துரத்தி மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய நிலையில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடியில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து வரும் போலீசார் பேருந்துகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.