புதுகை, கீரனூர் அடுத்த நார்த்தாமலை சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுசீலா (26) என்பவர் பொம்மடிமலை சர்ச் அருகே நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் சுசிலாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு, புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இதுகுறித்து அவரது கணவர் கார்த்திக் (35) அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.