புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கந்தர்வகோட்டை துவார் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கல்வி சீர் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பொதுமக்களுக்கும் மற்றும் சமூக அலுவலர்களுக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.