கீரனுார்: விவசாயி தற்கொலை; போலீசார் விசாரணை

74பார்த்தது
கீரனுார் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் வனத்துறைக்கு சொந்தமான தைலமரக் காட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

இதில், இறந்து கிடந்தவர் செங்கிப்பட்டி அருகே உள்ள சோழகம்பட்டியை சேர்ந்த விவசாயி பாலமுருகன் (40), என்பதும், அவரது மனைவி சூர்யா கடந்த 28ம் தேதி முதல் கணவரை காணவில்லை என்று கந்தர்வகோட்டை போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது. குடும்பத்தகராறு காரணமாக அவர் தூக்குமரத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி