புதுகை, கல்லாக்கோட்டை கால்ஸ் மதுஆலையில் கடந்த இரண்டு நாட்களாக ED சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று காலை முடிவடைந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரியிடம் கேட்கும் பொழுது அவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.