ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு - குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின்போது 12-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது. விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின. இந்நிலையில், “விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது” என்று தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார்.