பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

63பார்த்தது
பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல் ஒளிபரப்பு, சாதி ரீதியான சின்னங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மீறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளது. கடந்த சில தினங்களாக அரசுப் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாவில் சினிமா பாடல்கள், சாதி பாடல்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி