புதுக்கோட்டை மாவட்டம் பூவாலைக்குடி, மறமடக்கி போன்ற பகுதிகளில் இருந்து தென்னங்கன்றுகள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. இங்குள்ள ஒவ்வொரு தோப்பிலும் தென்னங்கன்றுகள் பதியம் போட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயி ஒருவரின் தென்னங்கன்று பண்ணையில் ஒரே தேங்காயில் 4 தென்ன நாற்றுகள் முளைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.