புதுநகர் அருகே பள்ளி மாணவி சாதனை

73பார்த்தது
புதுகை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடத்தியது. இதில் குளத்தூர் தனியார் பள்ளி மாணவி தவப்ரியா மாணவிகளுக்கான சிலம்ப இரட்டை கம்பு போட்டியில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரைப் பள்ளி தாளாளர் ஜெயந்தி முதல்வர் சக்திவேலு பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி