புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி போலீஸார் எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையில் அப்பகுதியில் சோதனை நடத்தி மது விற்பனை செய்த சுந்தரவடிவேல் (39), சூரியமூர்த்தி (55), ராமுக்கண்ணு (34) ஆகிய 3 பேரிடமிருந்து 78 மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.