புதிய அம்சங்களுடன் EV காரை அறிமுகம் செய்த கியா நிறுவனம்

76பார்த்தது
புதிய அம்சங்களுடன் EV காரை அறிமுகம் செய்த கியா நிறுவனம்
கியா நிறுவனம், 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, ரூ.65.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முந்தைய மாடலில் இருந்த 77.5 கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு பதிலாக 84 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80% வரை சார்ஜ் செய்திட முடியும். 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி