புதுகை: பைக் திருட்டு.. சிசிடிவி

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இந்த தனியார் வாகன ஷோரூமில் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் தலைமை மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரசாத் தனது இருசக்கர வாகனத்தை பணிபுரியும் ஷோரூம் சுற்றுச் சுவர் அருகே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்க்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற பொழுது இருசக்கர வாகனம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இருசக்கர வாகனம் நிறுத்த பட்டிருந்த இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில் சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொள்ளும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் பிரசாத் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் புகார் மனு அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பட்ட பகலில் இருசக்கர வாகன ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி