புதுக்கோட்டை மாவட்டம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் விடிய விடிய சோதனை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டது. பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ஆலைக்குள்ளே இருந்து மதுபானங்களை ஏற்றிச்செல்லும் எந்த வாகனமும் வெளியே செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்காததால் பரபரப்பு
தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆளை (கால்ஸ்) நேற்று மாலை முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்க துறை அதிகாரிகள் துணை இராணுவ படை பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனையானது விடிய விடிய நடைபெற்றதோடு இன்றும் இரண்டாவது நாளாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக டாஸ்மார்க் நிறுவனத்திற்கு 80 சதவீத மதுபானங்கள் அனுப்பப்பட்டால் 20% கணக்கில் காட்டப்படாமல் தனியாருக்கு டாஸ்மார்க் சீலோடு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது அமலாக்கத்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது