தமிழகத்தின் இன்றைய 3வது கொலை.. பரபரப்பு

56பார்த்தது
தமிழகத்தின் இன்றைய 3வது கொலை.. பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடம்பூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த சங்கிலி பாண்டி மீது காரை விட்டு மோதி, பின்னர் கீழே விழுந்த சங்கிலி பாண்டியை சிலர் அரிவாளால் வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடியுள்ளனர். காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த சங்கிலிபாண்டியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக சென்னையில் வழக்கறிஞர், சிவகங்கையில் முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி