நடிகர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்து வழங்கிய Five Star Creations நிறுவனத்துக்கு, நடிகர் தனுஷ் 6 ஆண்டுகளுக்கு முன் கால்ஷீட் கொடுத்தார். பின் இன்று வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனுஷ் பிடிகொடுக்காமல் இருக்கிறார். பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தலைமையில் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த விஷயத்தில் அரசியல் குறுக்கீடு இருப்பதால், தயாரிப்பாளராக தவிப்பதாகவும், நீதி விரைவில் கிடைக்க வேண்டும் எனவும் 5 ஸ்டார் பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.