மணமேல்குடி தாலுகா பிராமணவயல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சாம்ப பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தேர்தல் பணிக்குழு செயலாளர் மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் இ. ஏ. கார்த்திகேயன் கலந்து கொண்டார். இதில் கிராம மக்கள் மற்றும் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.