ஆலங்குடி - Alangudi

வீடியோஸ்


புதுக்கோட்டை
Mar 26, 2025, 10:03 IST/கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை

சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

Mar 26, 2025, 10:03 IST
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள காயாம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு மகன் வீரமணி(25). இவர் தன்னுடைய உறவினரான 15 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். தற்போது அந்த சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து குறித்து அந்த சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வீரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.