புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கீரமங்கலம் பேருந்து நிறுத்த பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார். இந்த தொண்டர்கள் மத்தியில் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதி மொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.