ஆலங்குடி - Alangudi

ஆலங்குடி: ஆபத்தான மின்மாற்றி..மக்கள் அச்சம்

ஆலங்குடி: ஆபத்தான மின்மாற்றி..மக்கள் அச்சம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் இப்பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பலத்த காற்று வீசும்போது இந்த மின்மாற்றி கீழே விழுந்தால் இப்பகுதியில் உள்ள மின்சாதனப் பொருட்கள் சேதமடைவதுடன், உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


புதுக்கோட்டை