

ஆலங்குடி : குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் நேற்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள குழந்தைகள் மையத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்பு குழந்தைகள் மையத்தில் உள்ள மின் இணைப்பு உயர்கள் கீழே தொங்கி கொண்டிருப்பதை கவனித்த அமைச்சர் அதை பாதுகாப்பான முறையில் பொறுத்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.