புதுக்கோட்டை மாவட்டம் கூத்தம்பட்டி அய்யனார்கோயில் அருகே சட்ட விரோதமாக 5 லிட்டர் கள் விற்பனையில் ஈடுபட்ட முருகன் (45) என்பவரை கிடைத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் இருந்து 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.