ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் சாகுல் (40) என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது. இதில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். இதில், நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் எதிர்பார விதமாக தீ பற்றி உள்ளது. ஆலங்குடி தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயணைத்தனர்.