
திருவரங்குளம்: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
திருவரங்குளம் அருகே உள்ள வாண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த அழகன் (45) என்பவர் கடந்த 31ஆம் தேதி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்பு தானம் செய்தனர். இந்நிலையில் அழகன் உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.