புதுகை, மேலநெம்மகோட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரன் (42) என்பவர் ஆலங்குடி அரசமரம் மதுபான கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே சோதனையில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் புவனேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.