வேலைவாய்ப்பு திறன்: 4.500 மாணவர்களுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுப்ட மாநில மன்றம், தமிழகம் முழுவதும் 4,500 மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் இறுதி ஆண்டு படிக்கும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 300 பேர் தேர்வு செய்யப்படுவர். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி நடைபெறவுள்ளது.