திருவண்ணாமலை மாவட்டம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கழுத்தில் மாலையுடன் வந்த புதுமண தம்பதிக்கு, சில திருநங்கைகள் எலுமிச்சம்பழம் கொண்டு திருஷ்டி சுற்றியுள்ளனர். பின்பு திருஷ்டி சுற்றியதற்காக ரூ.1000 கேட்டுள்ளனர். அதற்கு தரமுடியாது எனக்கூறிய புதுமண தம்பதியை அந்த திருநங்கைகள் தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வந்த போலீசாரையும் தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.