இரண்டு நாள் பயணமாக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 60 ஆயிரம் பேர் திரண்டு, தி.மு.க. கொடியுடன் வரவேற்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் முதல்வரின் கையைப்பிடிக்க முயன்றார். அப்போது அவர் பின்னல் இருந்த பாதுகாவலரிடம் அந்த நபரை அப்புறப்படுத்த சொல்வது போல் முதல்வர் கையசைத்தார். பாதுகாவலரும் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.