பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தற்கொலைப்படைத் தாக்குதலாகத் தெரிகிறது என்றும் முழு விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே குண்டு வெடிப்பு சமயத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ரயிலுக்காக காத்திருந்த போது இந்த கொடூரம் அரங்கேறியது.