ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன பேரணி

56பார்த்தது
காரைக்கால் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த கண்டன பேரணி காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று காரைக்கால் பெரிய பள்ளிவாசலுக்கு சென்றடைந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி