காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் தவக்கால நிறைவாக புனித வாரத்தின் துவக்க நாளான குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் காரைக்கால் தோமாஸ் அருள் வீதி சந்திப்பிலிருந்து புறப்பட்ட குருத்தோலை பவனி முக்கிய வீதிகள் வழியாக தூய தேற்றரவு அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.