காரைக்காலை அடுத்த தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள சிவலோகநாத சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை விழா நிறைவு நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வெள்ளி அங்கி சாற்றி மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை சூரிய ஒளி இறைவன் மீது விழுந்தது. அப்போது மூலவர் ஸ்ரீ சிவலோகநாதருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.