காரைக்காலில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கல்
காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக போனஸ் வழங்காத சூழ்நிலையில், இந்த வருடம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தீவிர முயற்சியினால் கோயம்புத்தூர் ஸ்ரீ முருகர் மில்சிடமிருந்து ரூபாய் 15 லட்சம் பெறப்பட்டு இந்த ஆண்டு ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் போனசாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் ஸ்ரீ முருகர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் அவர்களுக்கும், ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.