காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு நவராத்திரி துவக்கமாக முதல் நாள் பிரணாம்பிகை அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரணாம்பிகை தாயாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.