திருநள்ளாறு கோவிலில் சரஸ்வதி பூஜை விழா

72பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற சனிபகவான் ஆலயத்தில் இன்று சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதில் ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவனா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையும் அதனை தொடர்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள், ஆலய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி