காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் விஜயதசமி விழாவை முன்னிட்டு நேற்று இரவு அம்பு போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வந்து சுரக்குடி சாலை அருகே உள்ள அம்பு திடல் வந்தடைந்து அங்கு வன்னி மரமாக உருவெடுத்த வன்னி அரக்கனை அம்பு தொடுத்து வதம் செய்யும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.